Friday, March 16, 2012

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க

இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.


கீழே சில மாதிரிகளை கொடுத்துள்ளேன் பார்க்கவும்.




  • என்ன அழகாக உள்ளதா இதை நம் தளத்தில் பொருத்தினால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.

  • அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும். 

  • இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).

  • அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.

  • உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.

  • மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.

  • இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.
பிளாக்கில் உபயோகிக்கும் முறை 
  • இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு 

  • Design- Add a Gadget - Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
<a href="mailto:YOUR EMAIL ID"><img src="EMAIL LOGO URL" /></a>
  • YOUR EMAIL ID - உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.

  • EMAIL LOGO URL - என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும். 

  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
  • முடிவில் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் தளத்தில் நீங்கள் தேர்வு செய்த லோகோவுடன் உங்கள் தளத்தில் வந்திருக்கும்.

  • உங்கள் வாசகர்களும் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.

Tags:

0 Responses to “உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks