Friday, March 23, 2012

சட்டக் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் - கல்வி ஆண்டு 2013


இலங்கை சட்டக்கல்லூரி 2013ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம்  திகதி தொடக்கம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30௦ஆம் திகதி வரை அலுவலக வேலை நாட்களில் மு.ப. 9.00 மணி தொடக்கம் ந.ப. 12.00 மணிவரையும் பி.ப. 1.30 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணிவரையும் சட்டக்கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப்  பெற்றுக்கொள்ளலாம்.

அனுமதிக்கான தகைமைகள்:
நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஆகக் குறைந்த கல்வித் தகமைகள் 
  •  க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  •  க.பொ.த சாதரணதர பரீட்சையில் ஆங்கில மொழியிலும் சிங்கள/தமிழ் மொழிகளிலும் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
  • தொழில் புரிகின்ற மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பதற்கு அவர்களின் தொழில்தருனரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
  • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளன்று 17 வயதுக்குக் குறைய்யடவரை இருத்தல் வேண்டும்.

நுழைவுப் பரீட்சை:
விண்ணப்பதாரிகள் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பகுதியில் கொழும்பில் மாத்திரம் நடைபெறவுள்ள நுழைவுப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமெனத் தேவைப்படுத்தப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களை விளக்கப்பிரசுரம் மற்றும் பாடத்திட்டப் புத்தகம் என்பவற்றை வாசிப்பதன் மூலமாகவோ அல்லது சட்டக் கல்லூரிக்கு நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.
வினாப்பத்திரம், விளக்கப்பிரசுரம் மற்றும் பாடத்திட்டப் புத்தகம் என்பவற்றை :-
நேரில் பெற்றுக்கொள்ள :
ஹற்றன் நஷனல் வங்கியின் கல்முனைக் கிளையில் 063010004875 ஆம் இலக்க்கக் கணக்கில் அல்லது இலங்கை வங்கியின் கல்முனைக் கிளையில் 0001369779 ஆம் இலக்க வங்கிக் கணக்கில் Rs. 3,000/= ஐ செலுத்தி வங்கியின் மூலப் பற்றுச்சீட்டை சட்டக் கல்லூரி அலுவலகத்தில் சமர்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.
பதிவுத் தபால் மூலம் பெற்றுக்கொள்ள:
Rs. 3,000/=க்கான வங்கிப்பற்றுச் சீட்டையும் சுய விலாசமிடப்பட்ட 15" * 10" அளவிலான தபால் உறையுடன் தபாற் செலவுக்கான Rs. 150/= பெறுமதியான முத்திரைகளையும் கீழ் தரப்பட்டுள்ள கல்லூரியின் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், கல்விச்சான்றிதல்களின் போட்டோப் பிரதிகளுடன் குறித்த திகதிக்கு முன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி:
  •  2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி


___________________________________________________________________________

          THE PRINCIPAL,
          SRI LANKA LAW COLLEGE,
          No: 224, Hulftsdorp Street, Colombo 12. 
          Tel: 94-11-2473119 / 2323759
          eMail: locwal@slt.lk
          Web: http://www.sllc.ac.lk

Tags: , ,

0 Responses to “சட்டக் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் - கல்வி ஆண்டு 2013”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks