Friday, March 16, 2012
நம்முடைய பிளாக்கரில் " Save Page As PDF " பட்டன் கொண்டு வர
Friday, March 16, 2012 by Samsutheem Muhammadh Jahan
நாம் எழுதும் பதிவை படிக்கும் வாசகர்கள் அவர்களுக்கு ஒரு சில பதிவு பிடித்திருந்தால் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வார்கள். ஆனால் அதை ரொம்ப நாட்கள் வைத்திருக்க முடியாது எங்காவது தொலைந்து போய்விடும். ஆனால் நாம் எழுதும் பதிவை அப்படியே pdf கோப்பாக அவர்களுடைய கம்ப்யுட்டரில் சேமித்து வைத்து கொண்டால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் பார்த்து கொள்வார்கள்.
இந்த வசதியை பெற இந்த லிங்கை கிளிக் http://web2.pdfonline.com/ செய்யவும்.
உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
இதில்
உங்களுக்கு அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளுங்கள். (இது இலவச சேவை தான்
இதற்க்கு எந்த கட்டணமும் பிடிக்கமாட்டார்கள் ஆகையால் பயப்பட வேண்டாம்).
அக்கௌன்ட் உருவாக்கிய பின் உங்கள் USERID, PASSWORD கொடுத்து உள்ளே செல்லுங்கள். கீழே உள்ளதை போல விண்டோ வரும்
படத்தில் நான் காட்டியுள்ளதை போல் generate the Javascript என்ற
பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ள கட்டத்தில் Html
code வந்திருக்கும். அதை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர்
அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லுங்கள். <data:post.body/> என்ற
கோடிங்கை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே நீங்கள் காப்பி
செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தபின் உங்களுக்கு கீழே உள்ளதை
போல் வரும்
(சரியாக
தெரியவில்லை என்றால் படத்தை க்ளிக் செய்து zoom செய்து பார்த்து
கொள்ளவும்) படத்தில் காட்டியுள்ள படி வந்திருந்தால் கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கில் வந்து பார்த்தால் உங்களுடைய பிளாக்கரில் "Save As Pdf " என்ற பட்டன் வந்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “நம்முடைய பிளாக்கரில் " Save Page As PDF " பட்டன் கொண்டு வர”
Post a Comment