Friday, March 23, 2012
அரபுக் கல்லூரிப் பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறி - நேர்முகப் பரீட்சை
Friday, March 23, 2012 by Samsutheem Muhammadh Jahan
இஸ்லாமிய
அறிஞர்கள் , இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்ற அடிப்படையில் ஆழமான பரந்து
விரிந்த கல்வித்தரமுள்ளவர்களாக இந்நாட்டு அரபுக்கல்லூரிகளின் பட்டதாரிகளை
மேம்படுத்தும் நோக்கைக் கொண்டு பாரம்பரிய ஷரீஆக் கலைகளையும் நவீன கல்விசார்
துறைகளையும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள அரபுக் கல்லூரிப்
பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கான நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது .
இக்கற்கைநெறியில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை அல்லாஹ்வின் உதவியால் இன்சாஅல்லாஹ் எதிர்வரும் 20. 02. 2012 திங்கட் கிழமை காலை 9.00 மணிக்கு
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரிகளை
குறித்தநேரத்தில் சமுகமளிக்குமாறும் கல்லூரியின் நிர்வாகம்
வேண்டிக்கொள்கின்றது.
ஏற்கனவே விண்ணப்பிக்காத பின்வரும் தகைமைகளைக் கொண்டவர்களும் இந்நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவர்.
- இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரபுக்கலாசாலை ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல்
- இறுதிப்பரீட்சையில் மிக நன்று தரத்தில் சித்தியடைந்திருத்தல்
- 25 வயதிற்கு உட்பட்டிருத்தல்
- அடிப்படை ஆங்கில மொழியறிவும் அரபு மொழியை சிறப்பாகக் கையாளும் திறமையுமுள்ளவராயிருத்தல்
குறிப்பு:
நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிப்போர் கல்விச் சான்றிதழ்கள், இறுதிப் பரீட்சைத் தேர்ச்சி அறிக்கை, பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் பிரதி, 2 நற்சான்றுகள்
என்பவற்றைச் சமர்ப்பிப்பது அவசியமாகும். குறித்த கற்கைநெறி ஒரு வருடகால
எல்லையைக் கொண்ட முற்றிலும் இலவசமான வதிவிடக் கற்கை நெறியான குறித்த
பாடநெறி காலி இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரியினுள் ஒரு பிரத்தியேகப் பிரிவாக
இயங்கவுள்ளதுடன். மாணவர்களுக்குமாதாந்தம் விசேட கொடுப்பனவு வழங்கப்படும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 0777921418, 0773418432 ஆகிய தொலைபேசி
மூலமாகவும் ibnuabbas.galle@gmail.com
எனும் மின்னஞ்ஞல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென காலி
இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்
தெரிவித்துள்ளார்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
_____________________________________________________________
IBNU ABBAS ARABIC COLLEGE,
Tel : 0777921418, 0773418432
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “அரபுக் கல்லூரிப் பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறி - நேர்முகப் பரீட்சை”
Post a Comment