Sunday, March 25, 2012
மாணவர்களுக்குத் தேவையான பல புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்யும் இணையத்தளம்.
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டுவோருக்கு சில
நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்களை பெற்றுக்கொள்ள வெளிநாட்டு
எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டியதாக இருக்கும், இப்படி
நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய ஒரு தளம் உள்ளது.
இணையத்தளத்தின் முகவரி : http://bookboon.com/
இத்தளத்திற்கு
சென்று Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த
புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்தினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது அனைத்து
புத்தகங்களும் காட்டப்படும்.
இதில்
நமக்கு தேவையான புத்தகத்தை தெரிவுசெய்து அடுத்து வரும் திரையில் எந்த
நாட்டில் , என்ன படிக்கிறோம் என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை
அழுத்தி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு
படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து
நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “மாணவர்களுக்குத் தேவையான பல புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்யும் இணையத்தளம்.”
Post a Comment