Recent Articles

Friday, May 04, 2012

5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவை வெளியிட்டது கூகுள் சிறப்பம்சங்களை அறிய

Friday, May 04, 2012 - 0 Comments

கடந்த இரண்டு வருடமாக கிளம்பிய புரளிகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். கடந்த பதிவில் இன்னும் ஓரிரு நாளில் கூகுள் டிரைவ் வருகிறது என் பார்த்தோம். அதன் படி அதிகாரபூர்வமாக கூகுள் டிரைவ் வசதியை அறிமுக படுத்தியது கூகுள். Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஆடியோ, PDF, Douments, Photos பைல்களை சேமித்து வைத்து எந்த இடத்தில இருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து பார்க்கும் வசதியை அளிப்பது தான் Google Drive. நாம் பார்ப்பது மட்டுமின்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். எதிர்பார்த்த மாதிரியே 5GB இலவச இட வசதியுடன் வெளிவந்துள்ளது கூகுள் டிரைவ். அதற்க்கு அதிகமாக இடவசதி வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை (25GB for $2.49/month, 100GB for $4.99/month or even 1TB for $49.99/month) கட்டி பெற்று கொள்ளலாம்.

கூகுள் டிரைவ் சிறப்பம்சங்கள்:

  • ஒவ்வொருவரும் 5GB இலவச இட வசதியை பெறலாம்.
  • தற்பொழுது Windows,Mac, Android இயங்கு தளங்களில் இருந்து உபயோகிக்கலாம். iPad மற்றும் iPhone இயங்கு தளங்களுக்கு விரைவில் வர இருக்கிறது.
  • இதற்க்கு முன்னர் இருந்த கூகுள் டாக்ஸ் வசதி இப்பொழுது கூகுள் டிரைவில் இணைந்து விட்டது. ஆகவே ஆன்லைனில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கூகுள்டாக்ஸ் உபயோகிக்க முடியும்.
  • கூகுள் டிரைவ் தற்பொழுது போட்டோஷாப்(PSD) பைல்கள் உட்பட 30 க்கும் அதிகமான பைல்வகைகளை சப்போர்ட் செய்கிறது. 
  • கூகுள் டிரைவில் சேமித்து உள்ள பைல்களை குறிப்பட்ட குறிச்சொல் கொடுத்தோ அல்லது பைல்வகையை கொடுத்தோ தேடும் வசதி உள்ளது.
  • கூகுள் டிரைவில் டீபால்டாக OCR தொழில்நுட்பம் இணைந்துள்ளதால் ஏதாவது ஒரு ஸ்கேன் பைலை அப்லோட் செய்தால் அதில் இருந்து எழுத்துக்களை மட்டும் தனியே பிரித்து எடுக்க முடியும். 
  • கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்களை நேரடியாக கூகுள் பிளசில் பகிரும் வசதியும் உள்ளது மற்றும் விரைவில் கூகுள் டிரைவ் பைல்களை நேரடியாக ஜிமெயிலில் அட்டாச் செய்யும் வசதியும் வர இருக்கிறது. 
  • இது மட்டுமின்றி சில மூன்றாம் தரப்பு மென்பொருள்களின் உதவியுடன் fax அனுப்பும் வசதி, வீடியோக்களை எடிட் செய்யும் வசதிகளை விரைவில் தர இருக்கிறது. 
கூகுள் டிரைவ் பற்றி சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 

கூகுள் டிரைவ் வசதியை பெற:

எப்பவும் போல இந்த வசதி அனைவருக்கும் இல்லை. நான் முயற்சி செய்தேன் கிடைக்க வில்லை. இந்த லிங்கில் http://drive.google.com/start சென்று நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த வசதி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அதில் உள்ள Notify பட்டனை அழுத்தி விட்டால் போதும் உங்களுக்கு இந்தவசதி தயாரானவுடன் உங்களுடைய மெயிலுக்கு செய்தி அனுப்பி விடுவார்கள். பிறகு நீங்கள் கூகுள் டிரைவ் வசதியை உபயோகித்து கொள்ளலாம்.
இவ்வளவு வசதிகளை கொடுத்ததும் கடைசியில் கூலாக இது ஆரம்பம் மட்டும் தான் என்று கூறுகிறது கூகுள் நிறுவனம். அப்படியென்றால் இன்னும் ஏராளமான வசதிகளை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறது கூகுள் டிரைவ்.

இந்த வசதி உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என கீழே கமெண்டில் சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

தொழில்நுட்பம் வளர வளர தீங்குகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் புதிய வைரஸ்கள், மால்வேர்கள் உருவாகி கொண்டே உள்ளது. இவைகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க நாம் சில ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை நம் கணினிகளில் உபயோகிக்கிறோம். பெரும்பாலானவர்கள் இலவச ஆண்ட்டி வைரஸ் மென்பொருட்களை உபயோகிப்பதால் நம் கணினிகளுக்கு முழு பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. சில வைரஸ்கள் கணினிகளில் உள்ள ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதால் நம்முடைய ஆன்லைன் கணக்குகளும் பாதிக்கப்படுகிறது. பிரபல சமூக தளமான பேஸ்புக் ஒரு நாளைக்கு 6 லட்சம் ஹாக்கிங் முயற்சிகள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆக ஆன்ட்டிவைரஸ் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 
பேஸ்புக் தளம் சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை பரிந்துரை செய்யும் வகையில் AV Market Place என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில பயனுள்ள ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

AV Market Place ல் உள்ள ஆன்டிவைரஸ் மென்பொருட்கள்:

  1. McAfee
  2. Norton AntiVirus
  3. Microsoft Security Essentials
  4. Sophos Anti-Virus for Mac Home Edition
  5. Trend Micro internet security for PCs and Macs

மேலே உள்ள ஐந்து கட்டண மென்பொருட்களையும் ஆறு மாத இலவச லைசன்ஸ் கீயுடன் சேர்த்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
ஆண்டிவைரஸ் மென்பொருட்களை டவுன்லோட் செய்ய - AV Market Place

Tuesday, April 24, 2012

90 இலவச மென்பொருட்கள் - antivirus to webbrowsers

Tuesday, April 24, 2012 - 0 Comments

நீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா ,இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள் (softwares)நிறுவணுமா.? அதுக்கு நீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை .கீழ இருக்கற தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து மென்பொருட்களும் (a to z)ஒரே கிளிக்கில் கிடைக்கும்.


Sunday, April 22, 2012

ஆங்கில ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Sunday, April 22, 2012 - 0 Comments

2011/2012 ம் வருடம் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவான மானவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதற்காக ஆங்கில ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 


மேலதிக தகவலுக்கு:
Project Pre-orientation Programme(POP)
Ministry of Higher Education
No: 18,Ward Place,Colombo 07,Sri Lanka.
e-mail: popd@ugc.ac.lk

2010/2011 ஆம் வருட பல்கலைக்கழக மாணவர்களுக்கான POP - தரச்சான்றிதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2010/2011 ஆம் வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட Pre-orientation Programme(POP) இனது பெறுபேறுகள் மற்றும் சான்றிதல்கள் வெளியிடப்பட்டள்ளன.

உங்களது பெறுபேற்றை அறிய

உங்களது சான்றிதலை பெற


மேலதிக தகவலுக்கு:
http://pop.nodes.lk/


Project Pre-orientation Programme(POP)
Ministry of Higher Education
No: 18,Ward Place,Colombo 07,Sri Lanka.
e-mail: popd@ugc.ac.lk


Tuesday, April 17, 2012

TASKMANAGER தெரியவில்லையா?

Tuesday, April 17, 2012 - 0 Comments


நமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக Task Manager has been disabled by your administrator என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்



  • இதற்கு முதலில் Task Manager fix எனும் மென்பொருளை தறவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • பின் அதை INSTALL செய்யவும்
  • பின் அதை OPEN பன்னி அதில் இருக்கும் Fix Task Manager  என்று கொடுத்தால் Task Manager வந்துவிடும்.
  • இனி வழக்கம் போல் Ctrl+Alt+Delete கொடுத்தால் உங்கள் Task Manager Task Manager வந்துவிடும்


Task Manager Fix என்னும் மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி
இதன் அளவு வெறும் 76 KB தான்


டிஸ்கி:இந்த பிரச்சனை எனக்கு வந்த போது இனையத்தில் தேடி பார்த்தபோது எனக்கு கிடைத்த விடயம்

WindowsMediaPlayer-ஐ அழகுபடுத்த Skins


உங்கள் கணினி-ல் உங்களுக்கு விருப்பமான player -ஆன Windows Media Player -ஐ மேலும் அழகுபடுத்திட Windows Media Player Skins (அதாவது முகத்தோற்றம்)சேர்க்க வேண்டி உள்ளது.
இந்த windowsMedia Player skins- ஐ சேர்த்தால்
உங்களுக்கு விருப்பமான WindowsMedia Player அழகுபெறும்.இதை சேர்ப்பது கடினமான விஷயம் அல்ல.மிகவும் எளிதான காரியம்.download செய்த skins -ஐ  doubleclick செய்தாலே போதும்.பின்வரும் முகத்தோற்றங்களை பாருங்கள்.இங்கு ஏராளமான Skin-கள் இருக்கின்றன.




இந்த படத்தை பார்க்கும் போதே உங்ககளுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த skins -ல் terminator ,batman , duck,needforspeed,korilla ,xbox  என பலவகை உண்டு.இது முற்றிலும் இலவசம் நண்பர்களே!இந்த முகதோற்றத்தை உடனே தரவிறக்க சுட்டி

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks