Friday, May 04, 2012

பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

தொழில்நுட்பம் வளர வளர தீங்குகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் புதிய வைரஸ்கள், மால்வேர்கள் உருவாகி கொண்டே உள்ளது. இவைகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க நாம் சில ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை நம் கணினிகளில் உபயோகிக்கிறோம். பெரும்பாலானவர்கள் இலவச ஆண்ட்டி வைரஸ் மென்பொருட்களை உபயோகிப்பதால் நம் கணினிகளுக்கு முழு பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. சில வைரஸ்கள் கணினிகளில் உள்ள ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதால் நம்முடைய ஆன்லைன் கணக்குகளும் பாதிக்கப்படுகிறது. பிரபல சமூக தளமான பேஸ்புக் ஒரு நாளைக்கு 6 லட்சம் ஹாக்கிங் முயற்சிகள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆக ஆன்ட்டிவைரஸ் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 
பேஸ்புக் தளம் சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை பரிந்துரை செய்யும் வகையில் AV Market Place என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில பயனுள்ள ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

AV Market Place ல் உள்ள ஆன்டிவைரஸ் மென்பொருட்கள்:

  1. McAfee
  2. Norton AntiVirus
  3. Microsoft Security Essentials
  4. Sophos Anti-Virus for Mac Home Edition
  5. Trend Micro internet security for PCs and Macs

மேலே உள்ள ஐந்து கட்டண மென்பொருட்களையும் ஆறு மாத இலவச லைசன்ஸ் கீயுடன் சேர்த்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
ஆண்டிவைரஸ் மென்பொருட்களை டவுன்லோட் செய்ய - AV Market Place

Tags: , , ,

0 Responses to “பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks