Sunday, March 25, 2012
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
வீடியோ
எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம்
வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீடியோ
எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை
அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள்
பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை
ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
இத்தளத்திற்கு
சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங்
மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை
கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த
மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள்
தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான
மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும்
சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட்
செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு
வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு
எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும்
சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று
சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக
சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்”
Post a Comment