Wednesday, April 04, 2012

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய


முன்பு ஒரு பதிவில் Right Inbox என்ற நீட்சியை பற்றி பார்த்தோம். ஜிமெயிலில்  மெயில்களை Schedule செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு தானியங்கி முறையில் அனுப்ப உதவுதவு இந்த நீட்சி.. இப்பொழுது இந்த நீட்சியில் ஒரு புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளனர். அதாவது இனி இந்த நீட்சி மூலம் ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி  " மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

track_your_email

உபயோகப்படுத்துவது எப்படி?

  • இதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)
  • இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது. 
  • இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
  • அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும். 
  • ஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.
மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

டவுன்லோட் செய்ய 

Right Inbox for Chrome5.0+ டவுன்லோட் 
Right Inbox for Chrome3.6+ டவுன்லோட்

Tags: ,

0 Responses to “ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை Track செய்ய”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks