Tuesday, April 17, 2012
சந்தைக்கு வர இருக்கும் கூகுளின் அதிசய கண்ணாடி [வீடியோ இணைப்பு]
Tuesday, April 17, 2012 by Samsutheem Muhammadh Jahan
கட்டுபாடில்லா இணையத்தை தனது கட்டு பாட்டில் வைத்து கொண்டிருப்பது கூகுள் நிறுவனம். நீங்கள் இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தால் தினமும் ஏதாவது ஒரு கூகுள் தயாரிப்பை கண்டிப்பாக உபயோக படுத்துவீர்கள். பிளாக்கர், யூடியுப், ஜிமெயில், பிளஸ் இப்படி பல தயாரிப்புகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது கூகுள் நிறுவனம் ஒரு புதிய வகை கண்ணாடியை அறிமுக படுத்தியுள்ளது.
என்னெங்க கண்ணாடியை வெளியிட்டதை போய் ஒரு பெரிய இதுவா பேசுறீங்க எங்க ஊருல தெருவுக்கு தெரு கண்ணாடி விக்குராங்கன்னு சொல்றது எனக்கு கேக்குது ஆனால் இது வெறும் கண்ணாடி இல்ல பல அதி நவீன வசதிகள் அடங்கிய கண்ணாடி.
சிறப்பம்சங்கள்:
- இந்த கண்ணாடி மூலம் பிடித்த பாட்டு கேட்கலாம்.
- இந்த கண்ணாடிகள் கூகுள் மேப் உதவியுடன் உங்களுக்கு சரியான வழியை காட்டும்.
- இந்த கண்ணாடி மூலம் நினைத்த இடத்தை படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரலாம்.
- கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ காலிங் வசதி.
- அந்த கண்ணாடியை அணிந்தால் தட்ப வெட்ப நிலை உங்கள் கண் முன்னே மற்றும் பல அறிய வசதிகள்
இதெல்லாம் நான் சொல்றதை விட கீழே உள்ள வீடியோவை பாருங்க
இந்த கண்ணாடிகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை கூடிய விரைவில் வரலாம். இந்த கண்ணாடியின் விலை $250 இருந்து $600 வரை இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
Tech Shortly - [Microsoft new Freeware] Set bing images as your desktop wallpaper
Tech Shortly - [Microsoft new Freeware] Set bing images as your desktop wallpaper
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “சந்தைக்கு வர இருக்கும் கூகுளின் அதிசய கண்ணாடி [வீடியோ இணைப்பு]”
Post a Comment