Tuesday, April 03, 2012

முஸ்லிம் மானவர்களுக்கு IDB புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு 2012-2013 ஆம் கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம்மானவாகளுள் வருமையான 12 மானவர்களுக்கு சவுதி அருபியாவைச் தலைமையகமாகக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மருத்துவம், பொறியியல், விவசாயம், பல் மருத்துவம், கால்நடை வைத்தியம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மானவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் நிதிக்கான விண்ணப்பத்தை ஏப்ரல் 05 ஆம் திகதி வரை மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் கையளிக்கலாம்.

மாதமொன்றுக்கு 50 அமேரிக்க டொலர்கள் பெறுமதியைக் கொண்ட இப்புலமைப்பரிசில் நிதியை பெறுவோர் 2011ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டுமென்பதுடன் 24 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

தகமைகள்:

01. 2011 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றியிருக்க
     வேண்டும்.
02. மருத்துவம், பொறியியல், விவசாயம், பல் மருத்துவம், கால்நடை 
     வைத்தியம் போன்ற துறையில்  மாத்திரம் விண்ணப்பிக்கலாம்.
03. விண்ணப்பதாரி 24 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை கீழுள்ள முகவரியில்  பெற்றுக்கொள்ளலாம்.
Sri Lanka Islamic Centre
10, Rajapokuna Mawatha,
N.H.S. Maligawatte,
Colombo-10.


விண்ணப்ப முடிவுத்திகதி : 05 ஏப்ரல் 2012   

Tags: , ,

0 Responses to “முஸ்லிம் மானவர்களுக்கு IDB புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks