Friday, March 23, 2012
தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கான புதிய மாணவர் அனுமதி 2012
Friday, March 23, 2012 by Samsutheem Muhammadh Jahan
தொழில்
நுட்பக்கல்வி பயிட்சித் திணைக்களம் இலங்கை தொழில் நுட்பவியல்
கல்லூரிகளினூடாக நடாத்தும் தொழினுட்பவியல் டிப்ளோமா பாடநெறிகளுக்கான
விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இப்பயிட்சி
நெறிகளைப் பயில விரும்பும் மாணவர்கள் இலங்கையில் மாகான ரீதியாக அமைந்துள்ள
9 தொழிநுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் 12 வகையான N.V.Q மட்டம் 5(டிப்ளோமா) பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிட்சி நெறிகள் முழுநேர, பகுதிநேரம் என இரு அடிப்படையில் நடைபெற உள்ளது.
முழுநேரப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கு
முழுநேரப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கு
- சலுகை அடிப்படையிலான பேருந்து அல்லது புகையிரத பருவ காலச்சீட்டு.
- மாதாந்தம் ரூபா 1000 நாளாந்த கொடுப்பனவு.
- குறைந்த வருமானமுடையா மாணவர்களுக்கு ஒரே முறையில் வழங்கப்படும்
- ரூபா 2500 வரையிலான மாதாந்த உபகாரச் சம்பளம்.
- அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடம்.
- நூலக வசதி.
- பொது நலன் வசதி.
- பாடநெறியின் பின்னரான தொழில் பயிலுனர் பயிற்ச்சி.
- போன்ற இன்னும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் கொழும்பு மருதானை, காலி, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை, அனுராதபுரம், குருநாகல், அம்பாறை, இரத்தினபுரி போன்ற இடங்களில் தொழில் நுட்பவியல் கல்லூரிகள் காணப்படுகின்றன.
கற்கை நெறிகள்:
- தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியல்
- இயந்திர மின் இலத்திரனியல் தொழினுட்பவியல். (மெக்ரோநிக்ஸ்)
- நிர்மான தொழினுட்பவியல்.
- தன்னியக்க மோட்டார் வாகன தொழினுட்பவியல்.
- குளிரூட்டல் மற்றும் வ்ளிச்சீராக்கள் தொழினுட்பவியல்.
- பண்ணை இயந்திர தொழில் நுட்பவியல்.
- உயிர் மருத்துவ உபகரண தொழில்நுட்பவியல்.
- தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல்.
- மின்னால் காய்ச்சி ஒட்டுதல் (வெல்டிங்) தொழினுட்பவியல்.
- உணவு தொழினுட்பவியல்.
- ஆபரண உற்பத்தி மற்றும் வடிவமைப்பு தொழினுட்பவியல்.
- உற்பத்தித் தொழினுட்பவியல்.
மேலதிக விபரங்களையும், விண்ணப்பப்படிவங்களையும்
இங்கு click செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்
அல்லது 2012 பெப்ரவரி 3ஆம் திகதி அரச வர்த்தகமானியில் அல்லது உங்கள் பிராந்தியத்தில் அமைந்துள்ள தொழினுட்பவியல் கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம்.
________________________________________________________________________________
பணிப்பாளர் நாயகம்,
தொழில்நுட்பக் கல்விப் பயிட்சித்தினைக்கலம்,
No: 557, ஒல்கொட் மாவத்தை,
கொழும்பு-10.
Tel: 94-11-2324177
Web: http://www.dtet.gov.lk
_______________________________________________________________________________
Web: http://www.dtet.gov.lk
_______________________________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கான புதிய மாணவர் அனுமதி 2012”
Post a Comment