Home
» விண்ணப்ப படிவங்கள்
» இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2012
Sunday, March 25, 2012
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2012
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
இலங்கை
நிர்வாக சேவையின் வகுப்பு III இல் உள்ள பதவிகளுக்கு தகுதிபெற்ற இலங்கைப்
பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2012.03.23ஆம் திகதியன்று
வெளியான வர்த்தகமானிப் பத்திரிகையின் அடிப்படையில்,
பரீட்சை 2012, June மாதம் கொழும்பு நகரில் நடாத்தப்படும்.
பரீட்சைக்
கட்டணம் ரூபா.1,000 ஆகும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்
திகதிக்கு முன்னர் எந்தவொரு மாவட்ட செயலகத்திட்கோ அல்லது பிரதேச
செயலகத்திட்கோ வருமானத் தலைப்பு 2003-02-12 இற்கு வரவு வைப்பதற்காக செலுத்த
வேண்டும்.
எழுத்து மூலப் பரீட்சை பின்வரும் வினாப்பத்திரங்களைக் கொண்டது.
- பொது விவேகம்
- கட்டுரையும் சுருக்கமும்
- பொது அறிவு
- முகாமைத்துவ உளச்சார்பு
விண்ணப்பதாரிக்குரிய தகமைகள்:
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் பல்கலைக்கழகமொன்றில் பட்டதாரியாக இருத்தல் வேண்டும்.
- 2011.12.31 ஆந் திகதியில் 28 வயதைப் பூர்த்தி செய்யதவராக இருத்தல் வேண்டும்.
- நல்லொழுக்கத்துடனும் சிறந்த தேகாரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும்.
- ஏதேனுமொரு சமயக் கிளையில் மதகுரு அந்தஸ்தில் உள்ள எந்தவொரு நபருக்கும் இப்பரீட்ச்சைக்கு தோற்றுவதற்கு அனுமதியில்லை.
விண்ணப்பிக்கும் முறைகளும் மேலதிக தகவல்களும் மேற்குறிப்பிட்ட திகதியில் வெளியான வர்த்தகமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி 2012.04.09
வர்த்தகமாணியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2012”
Post a Comment