Sunday, March 25, 2012
2011 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Sunday, March 25, 2012 by Samsutheem Muhammadh Jahan
கடந்த
டிசம்பர் மாதம் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை
பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
கடந்த
வருடம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சையில் பாடசாலை
மற்றும் தனியார் பரீட்சாத்திகள் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர்
தோற்றியிருந்தனர். கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு அதிக எண்ணிக்கையான
பாடசாலை மாணவர்கள் தோற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
மேலும் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAMS என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் INDEX NUMBERஐ டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “2011 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.”
Post a Comment