Tuesday, March 13, 2012

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த


இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Skype மென்பொருளின் புது வசதிகள்:

1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.

2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன் மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள் Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில் இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின் தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்

3. Group Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Call செய்யும் போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும் பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொள்ளலாம்.

5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://www.skype.com/intl/en-us/get-skype/
(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)

Skype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த

ஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.
http://www.mediafire.com/?t4dgwe55mhjy3no

பின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language File என்பதைக் கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும். உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இதனை உருவாக்கியவர் ராமச்சந்திரன் ராஜ்காந்த். இலங்கையில் வசிக்கும் இவர் விவசாயத்துறையில் பணிபுரிகிறார். இவர் ஓப்பன் ஆபிஸ் அபிவேர்ட் தமிழாக்கத்திலும் பங்களிப்பு செய்துள்ளார். உங்களுக்கு நேரமிருப்பின் அவருக்கு ஒரு பாராட்டைத் தெரிவியுங்கள்.
http://www.facebook.com/raajkanth
http://eezhathamilan.blogspot.com/

Tags:

0 Responses to “Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks