Monday, March 26, 2012

அடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய - Photoshop CS6 beta

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்திற்கு எப்படி கூகுளோ அது போல போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் என்றால் போட்டோஷாப் தான் அதற்க்கு ஈடான மென்பொருள் இல்லை. உலகம் முழுவதும் போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த மென்பொருளின் புதிய பதிப்பான CS6 Beta வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்பது மேலும் ஒரு இனிப்பான செய்தி

adobe cs6


இலவசமாக டவுன்லோட் செய்ய:


முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொழுது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மற்றும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.  ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதற்க்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேலை செய்யாது.

Direct Download Links: 


Download Photoshop CS6 beta for Mac (DMG, 984 MB)
Download Photoshop CS6 beta for Windows (ZIP, 1.7 GB)

போட்டோஷாப் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய தேவையான Minimum System Requirements  அறிய இந்கு செல்லவும்.

Tags: , ,

0 Responses to “அடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய - Photoshop CS6 beta”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks