Friday, March 23, 2012

PALS e தமிழ் அகராதியை இலவசமாக தரவிறக்க

PALS e- தமிழ் அகராதி

- ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் 

இந்த அகராதி சுமார் 22,000 முக்கிய சொற்களையும் மற்றும் 35,000 வழி சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.
e-Dictionary ஒரு உலாவும் நிரலையும் தேடும் நிரலையும் கொண்டுள்ளது.
உலாவும் நிரல் ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அகராதியை உலாவும் போது ஒருவர் புல்லாங்குழல் வித்வான் ஷாஷன்க்கின் இசையைக் கேட்டுக் கேட்டே உலாவலாம்.
தேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

PALS e- தமிழ் அகராதி
- தமிழ் - ஆங்கிலம் 
 
Pals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி.
இந்த அகராதில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளது, இதிலும் ஒரு உலாவும் முறைமை மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டுள்ளது
உலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.
தேடும் முறைமையில் இன்னொரு வசதி என்னவென்றால் வேர் சொற்களின் பொருளை ஒருவர் பெறலாம்.
ஒருவர் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைமைக்கு தேவையான பொத்தானை கிளிக் செய்வது மூலம் மாற்றலாம்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்டோஸுக்கு
  • நிறுவல் தகவல்கள்
    • இந்த தகவல்களை பின்பற்றி மென்பொருளை நிறுவவும் :
    • Pals-Tamil-e-Dictionary.zipஐ கீழேயுள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்.
    • zip கோப்பு சேமிக்கப்பட்ட அடைவுக்குச் செல்லவும்.
    • zip கோப்பினை பிரித்தெடுக்கவும்
    • பால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்
    • பால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்
    • Setup.exe நிரலை அதன் சின்னத்தை இரட்டை சொடுக்குவது மூலம் இயக்கவும்.
    • நிறுவலுக்கு பின் கணினியை மீண்டும் துவக்கவும்.
    • பணிப்பட்டையில் Start பொத்தானை கிளிக் செய்யவும்.
    • Programs -> Pals Tamil e-Dictionary -> Tamil e-Dictionary என தேர்ந்தெடுக்கவும்
    • அகராதியைப் பயன்படுத்த தேவையான அனைத்து தகவல்களும் மென்பொருளிலேயே உள்ளது

     தரவிறக்க:
     
                 இங்கே கிளிக் செய்யவும் 


Tags: ,

0 Responses to “PALS e தமிழ் அகராதியை இலவசமாக தரவிறக்க”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Jahanlive. All rights reserved.
Designed by SpicyTricks